பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2015

காலசக்கரம் சுழலும் .தமிழர்களை கொன்று கொள்ளையடித்த பசில் இன்று சிறையில் வாடுகிறார்

ல்!
நேற்று இலங்கை வந்திருந்த பசில் ராஜபக்‌ஷ இன்று நடந்த விசாரணையின் பின்னர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று 7 மணித்தியால விசாரணையின் பின்னர் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைதாகிய பசில் எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விளக்கமறியல் பேருந்து ஒன்றும் வரவழைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி