பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2015

நிதி மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்


news
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

 
 
கைதுசெய்யப்படும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மாஅதிபர்  குறிப்பிட்டுள்ளார்.
 
 பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட எவரும் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
 
விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.
 
 
மேலும் நிதி மோசடி தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் சிலர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.