பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2015

பசில் ராஜபக்ச, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்


நிதி மோசடி தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவ உதவி கோரலின் கீழ் இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
திவிநெகும திணைக்களத்தின் சுமார் 70 மில்லியன் ரூபாய் நிதியினை  பிழையான வழியில் செலவிட்டார் என்று பசில் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பசில் ராஜபக்ச எதிர்வரும் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் அவர் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு கடுவல நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.