பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2015

அநுராதபுரம் சிறையில் இருந்து வெளிவந்த 40 கைதிகள்




அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறுகுற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டு அதனை செலுத்த முடியாத நிலையில் சிறைவாசம் அனுபவித்து வந்தவர்களே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழேயே இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.