பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2015

சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி



சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியாவில் 8வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மொகாலியில் சனிக்கிழமை நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பேட்டிங் தேர்வு செய்தார். 

பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பவன் நெகி, 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின்முலம் 9 ஆட்டங்களில் வெற்றி பெற்று 18 புள்ளிகளை பெற்ற சென்னை அணி முதலிடத்தை தக்கவைத்தது.

அணியில் அதிகபட்சமாக பிளிசிஸ் 55 ரன்களும், ரெய்னா 41 ரன்களும் எடுத்தனர்