பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2015

சேனுகா செனவிரட்னவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்


வெளிநாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் சேனுகா செனவிரட்ன மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் அவர் வதிவிடப் பிரதிநிதியாக இருந்த போது உயர்ஸ்தானிகரகத்தின் புனரமைப்பு தொடர்பில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த புனரமைப்பின் போது அதற்கான உடன்படிக்கை, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டமை தெரியவந்தது.
இதனை சேனுகாவுக்கு பின்னர் ஜெனீவாவின் உயர்ஸ்தானிகராக இருந்த தமரா குணநாயகம் வெளிக்கொணர்ந்தார்.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
இந்தநிலையிலேயே தற்போது புதிய அரசின் நல்லாட்சியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன