பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2015

மல்லாகத்தில் மின்தாக்கி தாக்கி தந்தையும் மகனும் சாவு


மல்லாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலியான சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது.
 
இன்று பிற்பகல் காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தவேளை கல்லாரை , மல்லாகம் வெள்ளைவாய்க்கால் பகுதியில் உள்ள மின்சார வயர்கள்  அறுந்து வீழ்ந்ததில்  சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்த தந்தையும்  மகனும்  பலியாகினர்.
 
இந்தச் சம்பவத்தில் கல்லாரையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ரஜீவன் (வயது 29) , ரஜீவன் (வயது 08) ஆகிய இருவருமே பலியானவர்களாவர். 
 
தற்போது இருவரது சடலங்களும்  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
 
மின்சாரவயர் அறுந்தமை தொடர்பில் மின்சார சபையினருக்குதெரியப்படுத்தப்பட்ட போதும்  45 நிமிடங்கள் கடந்த பின்னரே குறித்த இடத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.