பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2015

மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்ற சுப்ரமணியம் சாமி: திருமண விழாவில் பரபரப்பு

திருநெல்வேலியில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய சுப்ரமணியம் சாமி மணப்பெண்ணிற்கு தாலி கட்டச்
சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் திருமண விழா ஒன்றிற்கு தலைமை ஏற்க பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமியை அழைத்திருந்தார்கள்.
அப்போது தாலியை மணமகனிடம் கொடுக்க சொல்லி அவரிடம் கொடுத்த போது, அவர் மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அருகில் நின்றிருந்த சந்திரலேகா உள்ளிட்டவர்கள் அதிர்ந்து போய் அவரைத் தடுத்து, அந்தத் தாலியை மணமகனிடம் கொடுக்கச் சொல்லியதை அடுத்து அவர் மணமகனிடம் தாலியை வழங்கியுள்ளார்.