பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2015

நல்லாட்சியில் செயற்பட்ட பிரதி அமைச்சர் காலமானார்


சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நெரஞ்சன் விக்ரமசிங்க காலமாகியுள்ளார்.அவர் இன்று பகல் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் பாணந்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மேல் மாகாண சபை அமைச்சராக சில காலம் செயற்பட்டதன் பின்னர் 2010ம் ஆண்டு பொது தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1961ம் ஆண்டு பிறந்த இவர் தனது 54வது வயதில் உயிரிழந்தார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் கடந்த மாதம் 23ம் திகதி சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.