பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2015

வித்தியா கொலை சந்தேகநபர்கள் நாளை ஆஜர்! யாழ். நீதிமன்றங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு!


யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் 9 பேர் மற்றும் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட 43 சந்தேகநபர்கள் நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ள நிலையில் இரு நீதிமன்றங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது..
கடந்த 14ம், 17ம், 19ம் திகதிகளில் வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 3 சந்தேகநபர்களுக்கு 2ம் தடவையாக 6ம் மாதம் முதலாம் திகதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டதுடன், மற்றைய 6 சந்தேகநபர்களுக்கும் முதற்தடவையாக 6ம் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்க மறியல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த 9 சந்தேகநபர்களும் நாளைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவுள்ளனர்.
இதேவேளை கடந்த 20ம் திகதி நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தில் 129 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதில் 43 சந்தேகநபர்களுக்கு 6 ம் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்க மறியல் உத்தரவு வழங்கப்பட்டிருந்த்து
இந்நிலையில் குறித்த 43 சந்தேகநபர்களே நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் என பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த 43 சந்தேகநபர்களும் நாளைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதனையொட்டி ஊர்காவற்றுறை, யாழ்.நீதிமன்றம் ஆகியவற்றுக்கு விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் 9 சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டு நாளைய தினமே குறித்த வழக்கு யாழ். மேல்நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்னறது.