பக்கங்கள்

பக்கங்கள்

14 மே, 2015

அண்ணன் மகிந்த போட்ட சட்டம் தம்பி சமல் கையொப்பமிட்டு திருத்தினார்

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து திருத்தங்களுடனும் கூடிய 19ம் திருத்தச் சட்ட ஆவணம் நீதி அமைச்சினால் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
19ம் திருத்தச் சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி நிறைவேற்றப்பட்டது.
எனினும் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையின் காரணமாக 19ம் திருத்தச் சட்டம் குறித்த இறுதி ஆவணம் வெளியிடப்படவில்லை.
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் 19ம் திருத்தச்சட்டம் குறித்த முழு ஆவணத்தின் சிங்களப் பிரதி கடந்த 12ம் திகதி பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் கிடைக்க பெறுமாயின் அவற்றையும் சபாநாயகரிடம் சமர்ப்பித்து கையொப்பங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.