பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2015


ஐபிஎல் கிரிக்கெட் :  டில்லி அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தில்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி டாஸ் வெற்றி பெற்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. 4 ஓவருக்குள் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்கள் ஷேவாக், வோரா ஆகிய இருவரும் தலா 1 ரன் மட்டுமே எடுத்தார்கள். இருவரின் விக்கெட்டுகளையும் ஜாகீர் கான் வீழ்த்தினார். பிறகு மில்லர், பெய்லி, படேல் ஆகியோர் பொறுப்பாக ஆடி பஞ்சாப் 100 ரன்களைத் தாண்ட உதவி செய்தார்கள். அதிகபட்சமாக மில்லர் 42 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோல்டர் நைல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தில்லி அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே பறிகொடுத்து எளிதில் வெற்றி பெற்றது. அணியில் ஸ்ரேயஸ் அய்யர் 54 ரன்களும், அகர்வால் 52 ரன்களும் எடுத்தனர்.