பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2015

ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரநை பிள்ளையான் குழு சுடுவதற்காக துரத்தினர்


ஈரோஸ் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இரா.பிரபாகரனை நேற்றிரவு இனந்தெரியாத இருவர் துப்பாக்கியினால் சுடுவதற்கு முயற்சித்ததாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது பற்றி ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன் தெரிவிக்கையில்,
 தானும் தனது மனைவியும் நேற்றிரவு (4.5.2015)  மட்டக்களப்பு லேக் வீதியினால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தன்னை பின் தொடர்ந்து தன்னை சுடுவதற்கு முயற்சித்ததாகவும் பின்னர் தான் தப்பி வேறு ஒரு வழியினால் சென்று விட்டதாகவும் இதையடுத்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பிள்ளையான் குழுவினரே தன்னை சுட்டுக்கொல்ல முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரின் இம் முறைப்பாடு தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.