பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2015

ஓ.பி.எஸ். தம்பி மற்றும் மருமகனை ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவு?



நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம். இவரது சகோதரர் ராஜா. இவர் பெரியகுளம் நகராட்சி தலைவராக உள்ளார். நகராட்சி தலைவர் பதவியை ராஜா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ஒ.பன்னீர்செல்வம் மருமகன் காசிராஜனும் அரசு வக்கீல் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சொல்லி மேலிட உத்தரவு வந்திருப்பதாக வாட்அப்பில் செவ்வாய்க்கிழமை தகவல்கள் பரவின. 

ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டிருக்கும். இந்த தகவல் வதந்தியாக பரப்பப்பட்டுள்ளது என்று ராஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

கட்சியின் தேனி மாவட்ட பொறுப்பாளர்களோ நெருப்பில்லாமல் புகையாது. இரவு அல்லது புதன்கிழமை ஜெ. அறிக்கை வெளியிடுவார். அப்போது தெரியும் என்றனர்.