பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2015

ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சம் பேர் கண்டுகளிப்பு


வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய வைபவத்தை லட்சம் பேர் கண்டுகளித்தனர்.
 
சித்திரைதிருவிழாவின் ஒரு பகுதியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் திருவிழா இன்று காலை 6.47 மணியளவில் நடைபெற்றது. திருவிழாவை காண மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பச்சை பட்டாடை உடுத்து அலங்கரிக்கப்பட்ட தங்க கதிரையில் கள்ளழகர் பவனி வந்தார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியதை அடுத்து தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக வௌ்ளி குதிரை வாகனத்தில் வீரராகபெருமாள் ஆற்றில் இறங்கினார். ஆற்றில் கள்ளழகர் இறங்கியதை தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் பூக்கள் தூவி சாமி தரிசனம் செய்து வருகி்ன்றனர்.