பக்கங்கள்

பக்கங்கள்

14 மே, 2015

வீட்டைவிட்டு ஓடிய ஜோடி பீகாரில் பஞ்சாயத்து உத்தரவின்படி அடித்து,உயிருடன் எரித்துக் கொலை

 பீகாரில் பஞ்சாயத்து உத்தரவின்படி, வீட்டைவிட்டு ஓடிய ஜோடி அடித்து, உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டு உ
ள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

காயாவில் 16 வயது சிறுமி, 36 வயது வாலிபர் ஒருவருடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். வாலிபருக்கு ஏற்கனவே திருமணம்ஆகி குழந்தைகள் உள்ளது. கிராமத்திற்கு அவ்வபோது வாலிபர் வந்துஉள்ளார். அப்போது சிறுமியை சந்தித்து பேசிஉள்ளார். இதனை அடுத்தே இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதும், சிறுமியின் உறவினர்கள் அவர்களை வலைவீசி தேடிவந்தனர். மூன்று நாட்கள் கழித்து அவர்களை பிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்து, பஞ்சாயத்து முன் நிறுத்திஉள்ளனர். அப்போது அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 

பின்னர் பஞ்சாயத்து உத்தரவின்படி, கிராம மக்கள் அவர்களை கொடூரமாக அடித்து, உயிருடன் எரித்துக் கொலை செய்துஉள்ளனர். சம்பவம் தொடர்பாக தகவல் அறித்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து உள்ளனர். சிறுமியின் தந்தை உள்பட 15 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. “இதுதொடர்பாக நாங்கள் மேலும் விசாரணை நடத்தி வருகிறோம், மேலும் இச்சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை விரைவில் கைது செய்வோம்,” என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.