பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2015

பிரிட்டன் தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள்!

பிரிட்டன் பொதுத்தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கன்சர்வேட்டிவ், லிபரல், லிபரல் ஸ்தோத்ரயன் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குதல், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை தேர்தல் பிரகடனங்களில் சில வேட்பாளர்கள் உள்ளடக்கியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர் தமிழர்கள் ஆறு பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பிரிட்டன் வாழ் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் 84 வேட்பாளர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வேட்பாளர்களில் பலர் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது குறித்த யோசனையையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக புலம்பெயர் புலி ஆதரவு தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.