பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2015

அரசே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உடன் வழங்கு : இல்லையேல் கிழக்கு, மலையகத்திலும் போராட்டம் வெடிக்கும் ;சரா


புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும்  இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்,வர்த்தக சங்கம் இணைந்து முன்னெடுத்து வரும் கண்டன போராட்டம் ஒன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
 
 
குறித்த போராட்டம் தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சரா புவநேசன் உரையாற்றுகையில்,
 
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.குறித்த படுகொலையில் சம்பந்தப்பட்ட  குற்றவாளிகளுக்கு  கால இழுபறிகளும் இல்லாமல் உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு மரண தண்டனை வழங்குவதற்கு ஜனாதிபதி உறுதியளிக்க வேண்டும்.
 
நாம் முன்னெடுப்பது அடையாள போராட்டமே தவிர முழுப்போராட்டம்  அல்ல .ஆனால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படாவிட்டால் கிழக்கிலும்,மலையகத்திலும், இலங்கை பூராகவும் போராட்டம் வெடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் குறித்த போராட்டத்தில் வடமாகாண விவாசய அமைச்சர் ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை 
சேனாதிராஜா,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் ,சிவயோகம்,அனந்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.