பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2015

முதல்வர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அரச நியமனத்தில் தொண்டராசிரியர் நியமனத்துக்கான இழுத்தடிப்பு எதற்கு?,பத்து வருடங்களுக்கு மேலாக ஊதியம் எதுவுமின்றி சேவை வழங்கி வரும் எமக்கு நிரந்தர நியமனம் வேண்டும்,வேண்டும் வேண்டும் எமக்கான நிரந்தர நியமனம் மிக விரைவில் வேண்டும் ஆகிய பதாதைகளை தாங்கியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
 
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 
 
தங்களில் 43 பேர், 10 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுவதுடன், மிகுதிப் பேர், 5 தொடக்கம் 10 வருடங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர்.
 
கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தங்களை நியமனம் செய்யுமாறு கோரி அவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 
 
மேலும் அதன் பின்னர் ஆளுநர் அலுவலகம் முன்னால் போராட்டத்தை தொடர்ந்து மனு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=134214030813166977#sthash.aCm8rHEq.dpuf