பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2015

வித்தியாவின் படுகொலையானது ஒருவருடத்திற்கு முன் இடம்பெற்றிருந்தால் புங்குடுதீவுடன் மட்டும் நின்றிருக்கும்! கே.வரதராஜன்


வித்தியாவின் படுகொலையானது ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்றிருந்தால் யாழ்ப்பாணம் புங்குடு தீவுடன் மாத்திரம் நின்றிருக்கும் என கல்முனை வலய தமிழ்ப்பிரிவிற்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் கே.வரதராஜன் தெரிவித்தார்.
வித்தியாவின் படுகொலையினை கண்டித்து அவருக்கான இரங்கல் நிகழ்வும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இன்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையில் கல்லூரி முதல்வரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிற்றா பிரதீபன், கல்முனை வலய தமிழ்ப்பிரிவிற்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் கே.வரதராஜன் ஆகியோர் அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய உதவிக்கல்வி பணிப்பாளர்..

இந்த நாட்டிலே இன்று ஒரு புதிய அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது அதனடிப்படையிலேதான் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கும் அப்பால் பல முயற்சிகளை எடுத்து நல்லாட்சி நடைபெறவேண்டும் என முயற்சி எடுத்து வரும் நிலையில் வித்தியாவின் இந்த கொடூர நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது.

இந்தக் கொலைச் சம்பவமானது ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்றிருக்குமாக இருந்தால் நிச்சயமாக அது புங்குடு தீவுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்திருக்கும் ஆனால் இன்று இந்த நாட்டிலே நடைபெறும் ஆட்சியின் மூலம் அது முழு உலகத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த கொடூர சம்பவத்திற்கு அச்சானியாக இருப்பது மது போதனை பாவனையே காமுகர்களின் இந்த ஈனச்செயலுக்கு போதைவஸ்த்து முக்கிய இடம் பெறுவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டிலே போதைவஸ்து பாவனையில் முக்கிய இடத்தில் இருப்பது வடகிழக்கு மாகாணங்களிலே போதைவஸ்த்து பாவணை அதிகமாக இருப்பதனை நாம் அனைவரும் உணரமுடிகின்றது,  இதனை தற்போதைய இளைஞர்கள் மத்தியில் காணக்கூடியதாகவும் இருக்கின்றது.

போதைவஸ்து பாவனையின் காரணமாகவேதான் மிருகம் செய்யாத வேலையைக்கூட மனிதன் போதைவஸ்தை பாவித்து விட்டு செய்திருக்கின்றான் அந்தளவிற்கு மிருகத்தை விட மனிதன் கீழ்த்தரமான நிலைக்கு சென்றிருக்கின்றான் என்ற செய்தி நம் அனைவர் மனதிலும் வேதனைதரும் விடயமாகும்.

தற்போது கல்வி கற்கும் மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களில் போதைவஸ்து பாவனையில் ஈடுபடுவதாக தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது. பிரத்தியேக வகுப்புக்களுக்கு வரும் போதைவஸ்து வியாபாரிகள் முதலில் மாணவர்கள் மத்தியில் பணம் இல்லாமல் போதைவஸ்தினை கொடுத்து விட்டுச்சென்றபின்னர் அதனை அனுபவிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அதனை நாடிச்சென்று அனுபவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

காமுகர்களின் இந்த ஈனச்செயல்கள் மூலம் கொல்லப்பட்ட வித்தியாவின் படுகொலையானது எங்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமையவேண்டும் எனவும் கூறினார்.