பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2015

இலங்கை ராணுவத்துக்கு துணைபோவதா? தென் இந்திய ராணுவ தலைமையகம் முற்றுகை


இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு துணைப்போவதாகக் கூறி, சென்னையிலுள்ள தென் இந்திய ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் பல்லவன் பணிமனை அருகில் கூடிய தமிழ்தேச மக்கள் கட்சி என்ற அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும், சென்னையில் இருந்து தென் இந்திய ராணுவ தலைமையகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
 
தமிழீழ விடுதலைக்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். முற்றுகை முயற்சியை கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.