பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2015

சஷீயின் ஆவணங்கள் போலியானவை: உறுதிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்களம்


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்ச போலி பிறப்பு சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு திணைக்களம் இதனை தெரியப்படுத்தியது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சஷீ வீரவன்ச கடந்த பெப்ரவரி மாதம் 22ம் திகதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் 15 ஆயிரம் ரொக்க பிணையிலும், தலா இரு 5 இலட்சம் ரூபா சரீர பிணையிலும் சஷீ வீரவன்ச விடுவிக்கப்பட்டார்.