பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2015

மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி: அகமதாபாத் கோர்ட்



2014-ல் பொதுத்தேர்தலில் விதிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நிஷாந்த் வர்மா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மனுவை 11.05.2015 திங்கள்கிழமை தள்ளுபடி செய்து அஹமதாபாத் உள்ளூர் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட்டு எஸ்.ஆர்.சிங் உத்தரவிட்டார். 

பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சமர்பிக்கப்பட்டிருந்த ஆதாரங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இல்லை. மாநகர காவல்துறை நடத்திய விசாரணையில் இதுவரை குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எவ்வித முகாந்திரமும் இல்லாத காரணத்தினால் மனுவை தள்ளுபடி செய்வதாக கோர்ட் தெரிவித்துள்ளது.