பக்கங்கள்

பக்கங்கள்

3 மே, 2015

இலங்கையில் திருடப்பட்ட சொத்துக்களை அமெரிக்கா தேடிக்கொடுக்கும்: ஜோன் கெரி
இலங்கையில் ஆட்சியின் போது திருடப்பட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள அரச சொத்துக்களை தேடிக்கொடுப்பதில் அமெரிக்கா உதவும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள அமெரிக்கா ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த உறுதிமொழியை நேற்று கொழும்பில் வைத்து வழங்கினார்.
இலங்கையில் இருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்களும் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையின் மீளமைப்புக்கும் அமெரிக்கா உதவும் என்று கெரி உறுதியளித்துள்ளார்.