பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2015

பசிலை விடுதலை செய்ய சூழ்ச்சி


தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்து ஐக்கிய
தேசிய கட்சியில் இணைத்து கொள்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்ற பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான பிரதான 05 ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் செலவு தொடர்பான அத்தாட்சிகள் அதில் காணப்பட்டதாகவும் குறித்த திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எப்படியிருப்பினும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆவணங்கள் மாயமாகியுள்ளதனால் அவர் தொடர்பான அத்தாட்சிகள் அனைத்தும் அழிந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய இவ் ஆவணங்களை குறித்த நிறுவனத்தில் செயற்படுகின்ற ராஜபக்சவின் நெருக்கமான ஒருவரினால் எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்படுவதுடன்,
குறித்த ஆவணங்கள் காணாமல் போனமைக்கான காரணம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரை விடுதலை செய்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளாக இருக்கலாம் என பலர் சந்தேகிக்கின்றார்கள்.