பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2015

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் கைது? பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட மக்கள்!


புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று மாலையே இக்கைது இடம்பெற்றதாக புங்குடுதீவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கைது செய்யப்பட்ட  கொலை சந்தேகநபர்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அவர்களை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இது தவிர, இன்றும் மாணவியின் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும்  யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது