பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2015

மகிந்த ராஜபக்ச புதிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவசியம. இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார


எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவசியமென இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு தோல்வியுற்றமையினால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சியினூடாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் புதிய கட்சியின் சின்னம் மற்றும் பெயர் பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படாவிட்டால் மைத்திரி, மகிந்த சந்திப்பை தொடர்ந்து நடத்துவது அநாவசியம்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச இன்றி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு போதும் வெற்றி பெற முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.