பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2015

நடிகர் எம்.ஆர்.ராதா பேரன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி



நடிகர் எம்.ஆர்.  ராதாவின் மகன் நடிகர் எம்.ஆர்.ஆர். வாசு. இவரது மகன் எம்.ஆர்.ஆர். வாசு சதீஷ் (44). மேற்கு மாம்பலம் கோல்டன் காலனியில் வசித்து வந்தார். மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். 

நேற்று மாலை 4 மணி அளவில் சதீஷ், நண்பர்கள் சரவணன், பாலு ஆகியோருடன் வெளியில் சென்றார். குன்றத்தூர், பூந்தண்டலம் கிருஷ்ணா நகரில் உள்ள பங்களாவுக்கு படப் பிடிப்புக்கான இடத்தை பார்வையிட சென்றார். மாலை 4 மணி அளவில் அங்கிருந்த நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தார். 

அப்போது சதீசுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் சதீசை காப்பாற்றி நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு  கொண்டு  சென்றனர். பின்னர் மேல் சிசிச்சைக்காக மாங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு  மாற்றப்பட்டார். .

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ் நேற்று இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எம்.ஆர்.ஆர். வாசு சதீஷ், தனது தாத்தாவான எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் படத்தின் 2-ம் பாகத்தை சினிமாவாக தயாரிக்கும்  வேலையில் ஈடுபட்டு வந்தார்.