பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2015

முகநூல் அம்பர் எச்சரிக்கை முறை கனடாவில் ஆரம்பம்.

இன்று முதல் கனடா பூராகவும் உள்ள முகநூல் பாவனையாளர்கள் அம்பர் எச்சரிக்கை அறிவித்தலை அவர்களது சமூக வலையமைப்பு செய்தி
ஊட்டுக்களில் பெறுவர். சமூக வலையமைப்பு காணாமல் போன சிறுவர்களை விரைவில் கண்டுபிடிக்க உந்து சக்தியாக இருக்க இந்த புதிய திட்டம் உதவும் என கூறப்படுகின்றது.
நாடு பூராகவும் உள்ள பொலிஸ் திணைக்களங்கள் முகநூலுடன் இணைந்து இப்புதிய திட்டத்தை தொடங்குகின்றது. இதன் மூலம் கனடிய முகநூல் பாவனையாளர்களிற்கு, அவர்களது பகுதிக்குள் ஒரு பிள்ளை காணாமல் போனால் அவர்களிற்கு தெரியப்படுத்தப்படும்.
பிள்ளை ஒன்று காணாமல் போன சிறிது நேரத்தில் பாவனையாளர்களின் செய்தி ஊட்டில் அறிவிப்பை காண்பிக்கும். எச்சரிக்கை ஒரு படம் ,காணாமல் போன பிள்ளை குறித்த  தகவல்கள் போன்றனவற்றை கொண்டிருக்கும். பாவனையாளர்கள் இத்தகவலை மற்றவர்களுடனும் அவர்களது வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதால் அவர்களும் காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க உதவ கூடியதாக இருக்கும்.
காணாமல் போன சிறுவர்களை முடிந்தவரை கூடிய விரைவில் கண்டுபிடிக்க முகநூல் அம்பர் எச்சரிக்கை திட்டம் முக்கியமான ஒரு கருவியாக இருக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Steven Blaney திங்கள்கிழமை தெரிவித்தார்.இந்த திட்டம் கனடா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் தொடங்கப்படும். ஆனால் அம்பர் எச்சரிக்கை அமைப்பு அற்ற எல்லை பகுதிகளில் இருக்காதெனவும் கூறப்பட்டுள்ளது.
amber
- See more at: http://www.canadamirror.com/canada/43559.html#sthash.yjIUdFaq.dpuf