பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2015

புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் அமைதி ஊர்வலம்


யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி ஊர்வலமும் ஆத்ச சாந்தி நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் நடைபெற்றது.
புனித சவேரியார் கல்லூரிக்கு அருகிலிருந்து ஆரம்பமான இப்பேரணி, நுவரெலியா பிரதான வீதி ஊடாக லோசன் சுற்றுவட்டத்தை வந்தடைந்ததுடன், அங்கு இரங்கல் உரையும் சர்வமத வழிபாடுகளும் இடம்பெற்றது.
வ் ஊர்வலத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான புத்திரசிகாமனி, மதத் தலைவர்கள், வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.