பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2015

ஜெகத் டயஸின் நியமனம் குறித்து கருத்துக்கூற ஐக்கிய நாடுகள் மறுப்பு


இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படை தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துக் கூற ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளரின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக், நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்றபோது இந்த மறுப்பை வெளியிட்டார்.
இலங்கையின் இறுதிப்போரின் போது போர்க்குற்றம் புரிந்தவர்களில் ஜெகத் டயஸிம் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் அவரை உயர்பதவிக்கு இலங்கை அரசாங்கம் நியமித்தமை குறித்து செய்தியாளர்கள் பர்ஹான் ஹக்கிடம் கேள்வி எழுப்பினர்.
எனினும் முதலில், மனித உரிமைகள் சபை இந்தவிடயத்தை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாத்திரம் ஹக் பதிலளித்தார்.
ஏற்கனவே மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜெகத் டயஸின் நியமனத்தை கண்டித்திருந்தது
இந்த நியமனத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் நல்லணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.