பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2015

நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை: ஊர்காவற்துறையில் சம்பவம்


ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்குளி வீதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
37 வயதுடைய வில்யம் விமலசிறி என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் தன் மனைவியுடன் இடம்பெற்ற குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.