பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2015

கிளி. மாவட்ட கூட்டுறவுப் பணியாளருக்கு முப்பது சதவீத சம்பள உயர்வு


கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுப் பணியாளர்களுக்கான முப்பது வீத சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக
மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி.கே.அருந்தவநாதன் தெரிவித்தார்.
 
இந்த மாவட்டத்தில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இரண்டாம் படி சங்கங்கள் போன்றவற்றில் பணியாற்றும் சகல பணியாளர்களுக்கும் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக முப்பது வீத சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 
சங்கங்களின் தலைவர், பொது முகாமையாளர்களுக்கான மாதாந்தக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
மாவட்டத்தில் உள்ள சகல கூட்டுறவுச் சங்கங்களும் இந்தப் புதிய சம்பள உயர்ச்சியை  நடைமுறைப் படுத்தியதைப் பாராட்டியதுடன் சங்கங்களின் நிதி நிலைக்கேற்றவாறு பணியாளர்களின் சகல கொடுப்பனவுகளும் ஒழுங்கான முறையில் வழங்கப்படவேண்டும்.
 
அதனைவிட இந்த சம்பள உயர்ச் சிக்கான ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான நிலுவைகளும் பணியாளர்களுக்கு விரைவாக கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
அத்துடன் கூட்டுறவு நிறுவனங்களில் நிரந்தர நியமனம் இன்றி தற்காலிகமாக கடமையாற்றும் பணியாளர்களை விரைவாக நிரந்தரமாக்குவதற்கும் ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
குறிப்பாக சங்கங்களில் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்த தற்காலிக பணியாளர்கள் சகலருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.