பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2015

யுத்தம் குறித்து சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை: ஜனாதிபதி

யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு பொறிமுறைக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை இலங்கைக்குள் அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு பொறிமுறைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததோடு, மனித உரிமைகளை மீறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கப்படும் எனவும் குறிபிபிட்டுள்ளார்.
குறித்த விசாரணைகள் எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை 19ம் அரசியலமைப்பு திருத்த சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்தை அனைவரும் எதிர்பார்க்கலாம் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.