பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2015

மஹிந்த அரசின் மற்றுமொரு மோசடி! நிதி குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை


விளையாட்டு அமைச்சினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை கேரம் போட்டுகள், சுதந்திர ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பெறுமதி 39 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட இந்தக் கேரம் போட்களை, ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்கப்பட்ட கேரம் போட்கள் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.