பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2015

யாழ் நீதிமன்ற வன்முறை! பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்! வெள்ளவத்தை பொறுப்பதிகாரி யாழிற்கு மாற்றம்!


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து,  அங்கு கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறிப்பாக, யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், துணை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம், புங்குடுதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவை தேவைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதற்கு அனுமதியளித்துள்ளது.
வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரி யாழிற்கு மாற்றம்
புங்குடுதீவு மாணவி படுகொலையையடுத்து யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் நிலைமையை கருத்திற்கொண்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த உதயகுமார வூட்லர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழில் தற்போது காணப்படும் அமைதியற்ற சூழலை சுமுகமான நிலைக்கு கொண்டுவரவே  பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோனினால் நியமிக்கப்பட்டுள்ளார்.