பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2015

வரலாற்றுச் செய்தி /அனைத்து தண்டனைகளில் இருந்தும் ஜெயலலிதா விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. விரிவான தீர்ப்பு பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது இன்று காலை 11 மணிக்கு தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பை வழங்கினார். சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பெய்யானவை என்றும் ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் விரிவான தீர்ப்பு பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரிவான தீர்ப்பு பகல் 12 மணிக்கு வாசிக்கப்படும் என நீதிபதி குமாரசாமி அறிவித்து உள்ளார்.
 
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 