பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2015

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 125 ஆசனங்கள் கிடைக்கும்: உளவுத்துறை அறிக்கை.தமிழர் தரப்பின் ஆதரவு தேவைப்படும் நிலைகூட வரலாம்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 125 நாடாளுமன்ற ஆசனங்களை  பெற்றுக்கொள்ளும் என புதிய உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனியாக போட்டியிட்டால் மைத்திரி தரப்பினருக்கு 30 ஆசனங்களும் மஹிந்த தரப்பினருக்கு 20 ஆசனங்களும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
வத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள நிலையில் இந்த முடிவில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் சில மாற்றங்களினால் சிலவேளை எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலை வருமேயானால் தமிழர்தரப்பின் ஆதரவை கோரவேண்டி ஏற்படும் அந்த நிலை வந்தால் தமிழினத்துக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்