பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2015

கடடுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 16 புலிகளை ஓசைபடாமல் தூக்கிய மைத்திரி அரசு!


மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தமிழ் இளைஞர்களை , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஓசைபடாமல் தூக்கி வருகிறது இலங்கை ராணுவம். சமீபத்தில் கூட
இவ்வாறு ஒரு நபர் கைதாகி நேரடியாக 4ம் மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இறுதிப் போரில் விடுதலைப் புலிகள், பலரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவைத்ததாகவும். ஏன் அவர்களை புலிகள் அன் நாடுகளுக்கு அனுப்பினார்கள் என்று இதுவரை சரியான காரணங்கள் தெரியவில்லை என்றும் ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது தெரிவித்து வருகிறார்கள்.
இதன் அடிப்படையில் பெறப்பட்ட தகவல் ஒன்றுக்கு அமைவாக , இதுவரை சுமார் 16 தமிழ் இளைஞர்கள் இதுபோன்று கைதாகியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள். கடந்த சனிக்கிழமை அம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்துக்கது.