பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2015

எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்: மனோ கணேசன்


எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து தமக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிரதமரை தமது கூட்டணி சந்தித்த போது இந்த உறுதி மொழி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் இது குறித்து அறிவித்ததாக பிரதமர் கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் முற்போக்கு முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்திக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.