பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2015

களனி பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு: 42 பேர் கைது


களனி பகுதியில் திடீர் சுற்றிவளைப்பின் போது 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் சட்டவிரோத மது தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.