பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2015

நதியில் மூழ்கிய கப்பல்: 458 பேரின் நிலை என்ன? (வீடியோ இணைப்பு)



சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கி விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது.


உயிருடன் மீட்கப்பட்டவர்களில் கப்பல் தளபதி மற்றும் தலைமை பொறியாளர் அடங்குவர், மேலும்  பல பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீதியுள்ளவர்களை தேடும் பணியில் 50 படகுகள் மற்றும் 3,000 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி ஹூபி பகுதியில் உள்ள யாண்ட்சே நதியில் மூழ்கியது.
கப்பலில் 410 பயணிகளும் 48 ஊழியர்களும் பயணம் செய்துள்ளார்கள்.
இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்த 15 பேரை உயிருடன் மீட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.
பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்புபடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.