பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2015

யாழில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பாடசாலை மாணவர்களை மடக்கி பிடித்தனர் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள்


யாழ்.கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மாவா என்ற போதைப்
பொருளை வைத்திருந்த குற்றசாட்டில் அவர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டனர்.
 
 
குறித்த சம்பவம் இன்று காலை கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
 
 
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
 
மாவா என்ற போதைப் பொருளை பாடசாலையில் வைத்திருந்த 4 மாணவர்கள் தொடர்பில் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளுக்கு இரகசியமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் போதைப் பொருளை பாடசாலைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் அவர்களை மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.