பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2015

அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்ட முடிவு



சிவகாசி வட்டம் கண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என சிவகாசி வட்டாட்சியர் எஸ்.அய்யாக்குட்டி கூறினார். இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சிவகாசி வட்டம் வெம்பக்கோட்டை அருகே கண்டியாபுரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இதில் தற்போது 332 குடும்பங்கள் குடியிறுந்து வருகிறார்கள். இங்கு 1990ல் முகாம் தொடங்கப்பட்டது.

தற்போது பலருக்கு திருமணமாகியுள்ளது. எனவே கூடுதல் வீடுவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிதாக 50 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினர் இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து கருத்து அனுப்பியுள்ளார். அரசு அனுமதியளித்ததும் வீடு கட்டும் பணி தொடங்கும் என்றார் அவர்.