பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2015

கௌசல்ய சில்வா 80 ஓட்டங்கள் - வலுவான நிலையில் இலங்கை


இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 2 ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் முதல்போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை எடுத்திருந்தது.
அணி சார்பாக குமார் சங்கக்கார 50 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். கௌசல்ய சில்வா 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.