பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2015

9 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!


ஒன்பது பொலஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் இது தொடர்பிலான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சேவைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த பொறுப்பதிகாரி ஒருவரும், இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது