பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2015

எதிர்வரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரமே பல்கலைக்கழக அனுமதி


எதிர்வரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
திறைமைகளின் அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதே இதன் முக்கிய நோக்கம் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசியர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய தேரர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்பதற்கான விசேட திட்டம் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விசேட தேவையுடையோருக்கான வரப்பிரசாதங்களில் எவ்வித மாற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பேராசியர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பல்கலைக்கழங்களுக்கு தேர்களை இணைத்துக் கொள்வது தடைப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.