பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2015

மகிந்த நாளை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்

மெதமுலனையில் நாளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாகவும் அதன் பின்னர் எதிர்வரும்
6 ஆம் திகதி அனுராதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க போவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சில இணக்கப்பாடுகளுக்கு வந்தாலும் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் இருக்காது எனவும் சொய்சா கூறியுள்ளா