பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2015

ஆலயத்தில் கைவரிசை காட்டிய தென் பகுதி யுவதிகள்: மடக்கிப் பிடித்த அடியார்கள்

யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்களிடம்  தங்க நகைகளை அபகரிக்க முற்பட்ட இரு யுவதிகளை வட்டுக்கோட்டை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தென் பகுதியில் இருந்து வந்ததாத சந்தேகிக்கப்படும் இரு இளம் யுவதிகளும் ஆலயத்திற்கு வருகை தந்திருந்த பெண் ஒருவரிடம் இருந்து தங்கச் சங்கிலியினை அபகரிக்க முயன்றுள்ளனர்.
அத்தருனத்தில் ஏனைய அடியார்களினால் குறித்த இருவரும் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில், வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட வட்டுக்கோட்டை காவல் அதிகாரிகள் ஆலய முன்றலில் இரு யுவதிகளையும் கை விலங்கிட்டு, வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.