பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2015

மங்கள சமரவீர - உலக தமிழர் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு


லண்டனில் உள்ள இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் முதல் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க செய்தித்தாள்
தெரிவித்துள்ளது.
இதன்படி வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நாளை லண்டனில் உலக தமிழர் பேரவை பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் தென்னாபிரிக்க அரசசார்பற்ற அமைப்பு ஒன்றின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித்தாளான சண்டே ஒப்சேவர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையில் உள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜியோப் டொய்ட்ஜ்ஜை தொடர்புக்கொண்ட போது இது அரசாங்கத்துக்கும் மற்றும் ஒரு அரசாங்கத்துக்கும் இடையிலான திட்டம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்